இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில்!

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது.
இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை 9.00 மணியளவில் இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் இந்தியத் தேசியக் கொடியினை ஏற்றி, குடியரசுத் தலைவரின் சுதந்திர தினச் செய்தியை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனின் இன்னிசைக் கச்சேரி நிகழ்த்தப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் கரகாட்டம் மற்றும் பாடல்களும் இசைக்கப்பட்டன. இந்நிகழ்வில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், பாடசாலை மாணவர்கள், தூதரக ஊழியர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
Related posts:
பழங்களின் கழிவுகளால் வீதிகளில் சுகாதாரச் சீர்கேடு - சுகாதாரப் பிரிவினர்!
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படும் - பிரதிப் பொலிஸ்மா அ...
காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ ...
|
|