இந்தியாவின் 69வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது!

இந்தியாவின் 69வது குடியரசு தினம் இன்று (26) யாழில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள துணைத்தூதுவரின் “இந்தியன்” இல்லத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இந்தியத்துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
ஆதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவர் சிறி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின உரையாற்றி வாசித்ததுடன், தனது உரையினையும் ஆற்றியிருந்தார்.
ஆதனைத் தொடர்ந்து, இந்தியா அசாம் மாநிலத்தில் இருந்து வருகை தந்த பிகு நடன குழுவினரின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Related posts:
35 ஆயிரம் கிலோ பனம் வெல்லத்தை 2018 இல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!
மின்மோட்டர்கள் திருடியவரும் கொள்வனவு செய்தவரும் கைது!
1 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!
|
|