இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.

Saturday, August 24th, 2019

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது 66ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கடந்த 9ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Related posts: