இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ .பி.ஜே. அப்துல் கலாமின் 86வது பிறந்த தினம் இன்று

Sunday, October 15th, 2017
இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.
யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய பகுதியில் உள்ள அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு இந்திய துணைத் தூதுவர் ஆ. நடராஜன் மற்றும் அவரது பாரியார் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து  மத தலைவர்கள்  யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்  இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இந்திய சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவும்   நினைவுப் பேருரைகளும் இடம் பெற்றன. அதன்பின்னர், இந்திய துணைத்தூதுவரினால், சொற்பொழிவாளர் சுகி சிவம் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

Related posts: