இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வருகை!

Friday, November 27th, 2020

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இன்றையதினம் இலங்கை வருகிறார். இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

இவ்வாறான கலந்துரையாடல் ஒன்று இறுதியாக 2014’ஆம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்றிருந்தது.

இதற்காக மாலைதீவின் பிரதிநிதிகளும் இன்று இலங்கை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை வருகின்ற அஜித் டோவால் மாலைதீவு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவுடன் பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த ஒக்டோபர் மாதம் சீனாவின் உயர்மட்ட குழு ஒன்று இலங்கை வந்து சென்றதை அடுத்து அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்திருந்தார்.

அதனை தொடர்ந்து இடம்பெறும் உயர்மட்ட வெளிநாட்டு ராஜதந்திர விஜயமாக அஜித் டோவாலின் விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: