இந்தியாவின் சுதந்திரதினம் இன்று: ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு வாழ்த்து!

இந்தியாவின் 70 சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. .தனைமுன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தனது வாழ்த்தில்இலங்கையின் நெருங்கிய நண்பர் மற்றும் அயல்நாடான இந்தியாவுக்கு இலங்கை சகல வழிகளிலும் எப்போதும் துணையிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியேற்றும் நிகழ்வு, கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தியாவின் இசைக்கலைஞர் பிக்ரம் கோஸின் இசை நிகழ்ச்சியும் இன்று மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை இராணுவத்தில் புதிய பிரிவு!
வாள்வெட்டுக்குழு அட்ரூழியம் - கிராமசேவகர் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது!
திருமலையில் கொடிய நோயால் அவதியுற்ற குழந்தையின் சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவ...
|
|