இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், இந்தியா இவ்வாறு மேலதிக கடன் உதவிகளை வழங்குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியா, இலங்கைக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலரை நேரடி கடன் மற்றும் நாணய பரிமாற்ற உதவிகளை வழங்கியுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்களுக்கான உதவிகளையும் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இந்தநிலையில், மேலும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகியிருப்பதாகவும், அது தொடர்பான உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இந்திய தகவல்களை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளரத குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் - வடக்கு மாகாண சபையில் அன்ரனி ஜ...
நீர்த்தேக்கத் திட்டத்தை சுற்றி பாதுகாப்பு அணைச்சுவர் வேண்டும் என கோரிக்கை!
புத்தாண்டு காலப்பகுதியில் இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – நாட்டு மக்களிடம் அரச...
|
|