இந்தியமீனவர்களின் அத்துமீறியதொழில் நடவடிக்கைகளால் வடபகுதிகடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்பு.

Monday, June 26th, 2017

இந்தியமீனவர்களின் தடைசெய்யப்பட்டதும், அத்துமீறியதுமானதொழில் நடவடிக்கைகளால் தமதுதொழில் நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, கடற்றொழிலைநம்பிவாழும் தாம் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள்  கவலைதெரிவித்துள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் கடற்றொழிலைமேற்கொள்வதற்கு இந்தியமீனவர்களுக்கு அந்நாட்டரசு தடைவிதித்திருந்தநிலையில் இம்மாதம் 14 ஆம் திகதியுடன் குறித்தநாட்கள் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் வடபகுதிகடற்பகுதிகளுக்குவருகைதரும் இந்தியமீனவர்கள் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டதும், அத்துமீறியதுமானதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையேகடந்தவாரத்தின் நான்குநாட்களில் மட்டும் இவ்வாறான அத்துமீறியதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 இந்தியமீனவர்கள் இலங்கைகடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறுதடைசெய்யப்பட்டமற்றும் அத்துமீறியதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 59 இந்தியமீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதேவேளை, 162 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்தியமீனவர்கள் தொடர்ச்சியாகதமதுகடற்பரப்புக்கள் அத்துமீறிவருகைதந்துதடைசெய்யப்பட்டதும்,அத்துமீறியதுமானதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், இதன்காரணமாககடல்வளங்கள் முற்றாகஅழிவடையம் அபாயம் உள்ளதாகவும்,அத்துடன் கடற்றொழிலைதமதுவாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுவாழும் பல்லாயிரக்கணக்கானகுடும்பங்களின் வாழ்வாதாரமும்,பொருளாதாரமும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வடபகுதிக் கடற்றொழிலாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிதொழிலில் ஈடுபடும் இந்தியமீனவர்கள் கட்டாயமாககைதுசெய்யப்படுவார்கள் எனகடற்றொழில் அமைச்சர் மகிந்தஅமரவீரதெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts: