இந்தியப் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய!

இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம்வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று (29) இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியுடன் மிக குறைந்தளவான தூதுக்குழுவினர் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அதற்கமைய ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திரைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலீத் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகேஸ்வர பண்டார ஆகியோர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்தியாவின் இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையத்தை நேற்று (28) சென்றடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய போக்குவரத்து அமைச்சர் வீ.கே. சிங்ஹா உற்சாகமான முறையில் வரவேற்றமை குறிப்பிடதக்கது.
Related posts:
|
|