இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
இதன் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த தீவிரவாதச் செயலை கண்டித்துள்ளார்.
Related posts:
குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
24 மணிநேரத்தில் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று!
அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை - எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவி...
|
|