இந்தியச் சாரதிகள் இங்கு வேண்டாம்!

Saturday, February 4th, 2017

வடக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான சாரதிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். இதனால் இந்தியாவிலிருந்து சாரதிகளை அழைக்க வேண்டிய அவசியமில்லை என வடக்கு இலங்கைத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பேருந்துச் சாரதிகளின் பற்றாக் குறைக்குத் தீர்வாக இந்தியச் சாரதிகளை இங்கு கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்று யோசனைத் திட்டமொன்றை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறியிருந்தது. ஆனால் இந்த நிலை வடக்கில் இல்லை. சாரதி அனுமதிப் பத்திரங்களுடன் பல சாரதிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். அவர்களுக்கு வேலை வழங்குவதன் மூலம் அந்நியச் செலவாணியை மீதப்படுத்த முடியும் – என்றார்.

driving-720x480

Related posts: