இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் – நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர்!

கிறிஸ்மஸ் பண்டிகை இயேசு பிரானின் பிறப்பையும் இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும். இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும்.
ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுடன் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஆன்மீக ரீதியில் மனதை ஈடுபடுத்தும் ஒரு ஆழமான விடயம் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன” எனவும் பிரதமர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு பல பில்லியன் ரூபா நட்டம்!
சீனியின் விலை அதிகரிக்காது - நிதி அமைச்சு!
யாழில் கொடூரம் - அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி!
|
|