இதுவரை 14,285 பேருக்கு கொரோனா: 36 பேர் மரணம்!
Tuesday, November 10th, 2020நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று 14 ஆயிரத்தைக் கடந்தது. இதனடிப்படையில் நேற்றையதினம் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை 14,285 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று மற்றுமொரு கொரோனா மரணம் பதிவானது. கந்தானை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 595 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,880 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் தொற்றுக்குள்ளானோரில் 5,370 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|