இதுவரை வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/06/download-1-10.jpg)
இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எட்டரை இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் மூன்றாம் தரப்பினரால் அச்சிடப்பட்டு உரிமதாரர்களுக்கு வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மட்டும் 6 அல்லது 7 மாதங்களுக்குள் மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கில் 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
புத்தாண்டு நிகழ்வுகளுக்கு முன்அனுமதி பெறுவது அவசியம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் நாளைமறுதினம்முதல் முகமாலையில் பரிசோதனை!
|
|
மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் த...
ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு...
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை - அமைச்சர் பந்து...