இதுவரை மருந்து பரிந்துரைக்கவில்லை – கொரோனா தொடர்பில் உலக சுகாதார அமைப்பு!

Monday, April 6th, 2020

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நோயாளிகளைக் குணப்படுத்த விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் உட்பட பல பிரபல மருத்துவ அமைப்புக்கள், ஆராய்ச்சியாளர்கள் என மருந்தைக் கண்டுபிடிக்க முயன்றுவருகின்றனர்.

ஆனாலும் சில மேலைத்தேய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி கூடங்கள் என மேற்கோள்காட்டி மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தாலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க அல்லது குணப்படுத்த எந்தவொரு மாத்திரையையும் பரிந்துரைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவன இலங்கைக் கிளை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடித்துவிட்டன என்று பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையிலேயே கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்க அல்லது குணப்படுத்த எந்தவொரு மாத்திரையையும் பரிந்துரைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவன இலங்கைக் கிளை தெளிவுபடுத்தியுள்ளது

Related posts: