இதய நோயாளர்களுக்கு மருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டம்!

இதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கக்கூடிய மருந்து ஒன்றை இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்படும் நபர் ஒருவர் இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் அவரது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த மருந்தை மாரடைப்பு ஏற்பட்டு 3 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாரடைப்பைக் கட்டுப்படுத்தும் இந்த மருந்தின் தற்போதைய விலை 1இலட்சத்து 20ஆயிரம் ரூபா அகும். எனவே குறித்த மருந்தை குறைந்த விலைக்கு இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் பேச்சு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்து;ளார்.
இதய நோய் சம்பந்தமான விசேட நிபுணர் சங்கத்துடுன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
Related posts:
|
|