தோழர் விக்னராஜா வேதநாயகம் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!…

எமது திருகோணமலை மாவட்டத்தின் நிர்வாகச் செயலாளரும் வைத்திய கலாநிதியுமான தோழர் விக்னராஜா வேதநாயகம் அவர்கள் நேற்று மரணமானார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை தம்பலகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்தியர் விக்னராஜா அவர்கள் திருகோணமலையின் கிராமங்கள் தோறும் நோயாளிகளைத் தேடிச்சென்று ஆற்றிய சேவைகளும் அவர் கொண்டிருந்தமக்கள் நேசிப்பும் ஈடற்றவையாகும்.
திருகோணமலையில் அரசியல் தலைமைகளால் காலங்காலமாகஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு துயரங்களுடன் வாழும் மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து சேவை செய்யவும் சரியானதலை மைத்துவத்தை அந்த மக்களுக்கு வழங்கவும் தோழர் விக்னராஜா கடுமையாகஉழைத்தார்.
அவர் ஆரம்பித்தபணிகள் செய்து முடிக்கப்பட வேண்டியவை. அவர் மரணமாவதற்கு முன்னர் கூட திருகோணமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அந்தக் காணிகளின் உறுதிகளைப் பெற்றுக் கொடுக்கும் பணிகளில் கொழும்பில் தங்கியிருந்து அதிக அக்கறையோடு செயற்பட்டார்.
மக்களை நேசித்து அதற்காக உழைக்கவும் முன்வந்த தோழர் விக்னராஜா அவர்களின் இழப்பு ஏற்படுத்தியிருக்கும் துயரத்தை சுமந்திருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
தோழர் விக்னராஜா அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளைமாலை 4.00 மணிக்கு தம்பலகாமத்தில் உள்ளஅவரது இல்லத்தில் நடைபெறஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
|
|