இணைய பாதுகாப்பு தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவை அனுமதிக்கு!

இணையவழி தாக்குதல்களைத் தடுப்பதற்காக இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் நாட்டின் கணினி கட்டமைப்பில் இணையவழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்த நிலையில், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக வலைதளங்களின் மீதான பயன்பாடு சில காலம் தடை விதிக்கப்பட்டமை ஊடாக குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மே மாதம் 13 ஆம் திகதிவரை எவ்வித பாரதூரமான சம்பவமும் இடம்பெற்றிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை அவதானிக்கும்போது, அது ஒரு புறத்தில் சாதமாக அமைந்துள்ளது என்று கூறலாம். எவ்வாறிருப்பினும், சமூகவலைதளங்கள் மீது தடை விதிப்பது ஒருபோதும் சிறந்ததல்ல என்றும் அஜித் பி பேரேரா கூறியுள்ளார்.
Related posts:
|
|