இணைய நிதிமேசடி- கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் இணையவேண்டும்: நிதி அமைச்சர்

Saturday, April 16th, 2016
இணைய நிதிமேசடிகளை கட்டுப்படுத்துவதற்கு ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.
மேலும், பங்களாதேஷ் வங்கி ஒன்றில் 100 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதை சுட்டிகாட்டினார்.
குறித்த நிதி மோசடி தொடர்பில் இதுவரையில் எவரும் கண்டறியப்படாதது கவலைக்குறியது என தெரிவித்த அமைச்சர் எதிர்காலத்தில் இது போன்ற இணைய நிதி மோசடிகளை தடுக்க இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை வழங்குமென நிதி தெரிவித்துள்ளார்.

Related posts: