இணைய எல்லைகளை பாதுகாப்பதே நாம் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினையாகும் – பாதுகாப்பு செயலாளர்!
Wednesday, December 7th, 2016இலங்கையில் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் இணைய எல்லைகளை பாதுகாப்பதே நாம் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினையாகும் என்று பாதுகாப்பு செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இவ்வகையான பயங்கர விளைவினை எதிர்நோக்கக் கூடிய எந்தவித பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை குறைக்க அல்லது பாதுகாக்க கூடிய அறிவினை நாம் கொண்டுள்ளோம் என்று நேற்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இலங்கை மைக்ரோசாப்ட் மற்றும் லங்கா லொஜிஸ்டிக் கம்பனி ஏற்பாடுசெய்த டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு என்னும் பயிற்சிப்பட்டறை கலந்துகொண்டு பாதுகாப்பு செயலாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்றைய சூழலில் தகவகல்ளை பெற்றுக்கொள்ளல் உயிர் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் பல்வேறு அச்சுறுத்தல்களை கண்டறியத்தக்க வகையில் புலனாய்வு தகவல்களாக மாற்றம் பெறுவதற்கும் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் முக்கிய அளவீடுகளாக அமைகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொழிநுட்பத்துறையில் ஏற்பட்டு வரும் துரித மாற்றங்களின் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக விரிவான விளக்கத்தை பெற்றிருத்தல் அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
தகவல் தொழிநுட்பப் போர் யுகத்தில் நாம் எமது சேவைகள் செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைகள் என்பனவற்றை புதுமையான தொழில்நுட்பதுறைக்குட்படுத்தல் அவசியமாகும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|