இணையவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரால் மிரட்டப்பட்டால் உடன் நடவடிக்கை – பொலிசாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு!

Friday, September 17th, 2021

பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் முறைமையில் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ்  தலைமையகம் அறிவித்துள்ளது.

அவ்வாறே, குறித்த ஆசிரியர்கள் அவசியம் ஏற்படின் 119 காவல்துறை என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான முறைப்பாடுகள் தெடர்பில் தாமதிக்காமல், சரியான முறையில், மிகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: