இணையம் ஊடாக பல்கலைக்கு விண்ணப்பிக்க புதிய வசதி!

Saturday, April 16th, 2016
இணையத்தின் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கான நுழைவிற்கான விண்ணப்பங்களை செய்ய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இனி வரும் காலங்களில் இணையம் ஊடாக விண்ணப்பம் செய்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்லைன் முறையில் விண்ணப்பம் செய்த மாணவ மாணவியருக்கு அது குறித்து செல்லிடப் பேசி குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் எதிர்வரும் 2017ம் ஆண்டு முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் கற்கை நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் மாணவர் பதிவுகளை ஒரே தடவையில் மேற்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: