இணையத்தள மோசடி குறித்து 1600 முறைப்பாடுகள்!

Wednesday, July 19th, 2017

இணையத்தளத்தை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப் பகுதியில் ஆயிரத்து 600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் அமைப்பு கூறியுள்ளது.

கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 80 வீதமானவை போலியான முகநூல் சம்பந்தமான முறைப்பாடு என அமைப்பின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இணையத்தளத்தில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரில் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பாகவும் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: