இணையத்தள பிரவேசத்துக்கு ஐ.நா.சபை ஆதரவு!

UN-GENERAL-ASSEMBLY-626x380 Tuesday, March 13th, 2018

இலங்கையில் சுதந்திர இணையத்தள பிரவேசத்துக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமுக வளைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் துறை உதவி பொதுசெயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மன், சமுக வலைத்தளங்களுக்கான தடைகள் குறித்து அவதானம் செலுத்தினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் பேச்சாளர், ஆனால் இணையத்தளத்துக்கு சுதந்திரமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர், இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.