இணையத்தளம் மூலம் அந்நிய செலாவணி!

Sunday, March 26th, 2017

 

இணையத்தளம் மூலம் சேவைகளை வழங்கி நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்று தரும் சுமார் 20 ஆயிரம் இளைஞர், யுவதிகள் இலங்கையில் இருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இளம் வர்த்தகர்களே ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு புதிதாக ஒன்றை சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இளைஞர்களின் வர்த்தகம் சகல இடங்களிலும் இருப்பதாகவும் தேயிலை, இறப்பர் மற்றும் ஆடை உற்பத்தி பொருளாதாரத்திற்கு பதிலாக புதிய பொருளாதாரத்தை நாட்டுக்கு உரித்தாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2020ம் ஆண்டில் தேயிலை, தெங்கு, இறப்பர் மற்றும் ஆடை உற்பத்திற்கு பதிலாக இணையத்தளத்தில் சேவை விற்பனை செய்யும் வலுவான படித்த இளைஞர் பரம்பரை இருக்கும் நாடாக இலங்கை மாற்றமடைய வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: