இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் 19 சதவீதமானவர்கள் சிறுவர்கள்!

இலங்கையில் இணையத்தளங்களுக்குள் பிரவேசிக்கும் 10 முதல் 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 19 சதவீதமானவர்கள் ஆபாச காணொளிகளை பார்ப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஒழுங்கு செய்திருந்த இணையத்தள பாதுகாப்பு தொடர்பான மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு அதிகாரிகளுக்கு விளக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காலியில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குருணாகல், கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்கள் அதிகளவில் இணையத்தளங்களை பயன்படுத்தும் பிரதேசங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.இதன்போது கருத்து வெளியிட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சபையின் விசாரணை அதிகாரியான சம்பிய கே. அயகம.இணையத்தளம் காரணமாக பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். இது குறித்து பெற்றோர் கூடிய கவனத்தை செலுத்த வேண்டும்.இதனை உடல் மற்றும் உள ரீதியான துஷ்பிரயோகங்களாக வேறுப்படுத்த முடியும். பாலியல் என்றும் வேறுப்படுத்தலாம்.சிறுவர் துஷ்பிரயோகங்கள் தற்போது வித்தியாசமான முறையில் நடக்கின்றன.அரச நிறுவனங்கள் சரியான முறையில் இந்த விடயத்தில் செயற்படாத காரணத்தினால், இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன.மனிதன் சூழலுக்கு சூழல் மாற்றமடைகிறான். தொழிற்நுட்ப ரீதியான மாற்றங்களை சிறந்த முறையில் உருவாக்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சேட் அறைகள் இலங்கையின் கிராமங்களில் தற்போது அதிகரித்துள்ளன.இதில் இணைய பாலியல் தொழில் மற்றும் சூதாட்டங்களையும் காணமுடியும். இவற்றில் இருந்து தற்காத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|