இணைந்தசேவை அலுவலர்களின் மேன்முறையீடுகளின் பரிசீலனை நிறைவு : உரிய இடங்களுக்கு அனுப்பிவைப்பு!

Saturday, November 24th, 2018

வடக்கு மாகாணத்தில் இணைந்த சேவை அலுவலர்கள் வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடு அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றப் பட்டியல் குறித்த அலுவலகத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாகாணப் பிரதி முதன்மை செயலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்படுவது வழமை. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சாரதிகள், அலுவலகப் பணியாளர்கள் இதில் உள்ளடங்குவர். இடமாற்றம் வழங்கப்பட்டால் 2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் முதலாம் திகதியில் அவர்கள் இடமாற்றம் வழங்கப்பட்ட இடத்தில் கடமையைப் பொறுப்பேற்க வேண்டும்.  இடமாற்றம் பெறுபவர்களின் பெயர் விபரங்கள் இடமாற்ற சபையால் தீர்மானிக்கப்பட்டு கடந்த ஒக்ரோபர் மாதம் திணைக்கள, அலுவலக தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த இடமாற்றங்களில் மேன்முறையீடுகள் இருந்தால் ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு அமைவாக 187 பேரின் மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு இடமாற்றம் தொடர்பான விபரங்கள் கடந்த 15 ஆம் திகதியளவில் குறித்த அலுவலக தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related posts: