இணுவில் விபத்து – சிறுவன் பலி : பொலிஸ் அதிகாரி கைது!

Thursday, January 17th, 2019

இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தைப்பொங்கல் தினத்தன்று இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.

இந்த விபத்தின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விபத்துச் சம்பவத்தின் பின்னர், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஓட்டி வந்த முச்சக்கரவண்டி மோதியே விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய காரணத்தினாலும், சிறுவன் உயிரிழந்த காரணத்தினாலும், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரி.திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சுன்னாகம் பொலிஸாரினால் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை முன்னெடுத்து வருகின்றதுடன், விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: