இணுவில் பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Monday, October 22nd, 2018

புதிய எல்லை நிர்ணயத்தின் பிரகாரம் இணுவில் கிழக்கு பகுதியின் ஒரு பகுதி நல்லூர் பகுதியுடன் சேர்க்கப்படுவதை எதிர்த்து குறித்த பிரதேச மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் மௌன ஊர்வலமாக சென்று உடுவில் பிரதேச செயலரிடம்  மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு முன்னெடுத்த குறித்த போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான  வலன்ரயன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் மனோ  உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

44475027_317929515689953_5203456559614525440_n 44563140_2199364560329002_8335409813517238272_n

Related posts: