இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் எல்லா சந்தர்பங்களிலும் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்களின் பயணம நிறைவு!
பொது மக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் இராஜாஜி அரங்கத்தில்!
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 56 பேருக்கு மன்னாரில் பீ.சி.ஆர்.பரிசோதனை - மாவட்டத்தின் பிராந்தி...
|
|