இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எட்டியதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!
Saturday, April 18th, 2020இடைநிறுத்தப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணியினை, மீள ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருடன் கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக குறித்த நடவடிக்கையிலிருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர்.
அதேநேரம், சுற்றுநிருபத்தில் காணப்படும் குறைப்பாடுகளை முன்னிலைப்படுத்தி கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்கள்; பணிப்புறக்கணிப்பிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம்முதல் மீண்டும் தமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|