இடைநடுவில் விலகிய மாணவர்களை இலக்கு வைக்கும் நீதிமன்றம்!

Wednesday, July 6th, 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்கு செல்லாமல் இடைநடுவில் விலகி, கல்வியைத் தொடராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கான கல்வியை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டகளைக்கு அமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை இலக்கு வைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்று, நேற்று(5) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில், கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, சாந்தபுரம் கிராமத்தில் இந்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது, பாடசாலையை விட்டு விலகி கல்வியைத் தொடராத 15 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு வருமாறு அவர்களின் பெற்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்று மலை கிளிநொச்சி திறந்த நீதிமன்றில் பெற்றோருடன் குறித்த சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான தேடுதல்கள் நடத்தப்பட்டு பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களுக்கு கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: