இடைத் தரகர்களிடம் சிக்காமல் செயற்பாடுகளை முன்னெடுங்கள் – வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்து!

Friday, October 22nd, 2021

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத் தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான நேரடி அணுகல்களை அதன் கட்டுப் பாட்டின் கீழ் உரிமம் பெற்ற தரப்பினரிடமிருந்து மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு அந்தப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற உரிமம் பெற்ற 800 முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதில் ஏதேனும் சிக்கல் நிலை காணப்படுமாயின் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வெளிநாடு சென்ற 400 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் நாடு திரும்பவில்லை - பிணையாளர்களிடம் பணம் அறவிட ...
மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் எந்தவொரு உடன்படிக்கையும் செய்யப்படமாட்டாது - பிரதமர் மஹ...
எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் டி.வி.சா...