இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, October 21st, 2022

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்கு...
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை - விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெர...
குருந்தூர் மலையில் புதிய சிவன் கோயில் நிர்மாணம் - குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடன் தீர்மான...