இடர் உதவிக்கு நிதி திரட்ட யாரையும் நியமிக்கவில்லை இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 4th, 2017

இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிப்பதற்கு தனிப்பட்டவர்களையோ குழுக்களையோ அரசு நியமிக்கவில்லை அவ்வாறானவர்களிடம் பணத்தையோ அல்லது ஏனைய நன்கொடைகளையோ வழங்க வேண்டாம். இவ்வாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்துள்ளார்.

வெள்ளத்திலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக நிதி சேகரிக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் தனக்கு கிடைத்திருப்பதாகவும் அவ்வாறு நிதியையோ ஏனைய பொருட்களையோ சேகரிக்க எவருக்கும் தனது அமைச்சு அனுமதி வழங்கவில்லை எனவம் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான சகல உதவிகளும் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்கள் மூலமாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய மக்கள் விரும்பினால் தனது அமைச்சுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அதை விடுத்து எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட நபர்களிடமோ குழுக்களிடமோ பணத்தையோ ஏனைய அன்பளிப்புக்களையோ வழங்க வேண்டாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: