இடர் அனர்த்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு தயார் – தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையம்!

Monday, December 4th, 2017

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடர் அனர்த்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதற்காக 17 கோடி 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ பணிப்பாளர் சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பாதிப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், இழப்பீடுகளை வழங்க அரசாங்கம் தயாராகியுள்ளது. அனர்த்தங்கள் காரணமாக 762 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 246 ஆகும். இருப்பிடங்களை இழந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,424 ஆகும். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 56 பேர் பாதுகாப்பான 65 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்து 226 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 22 ஆயிரத்து 986 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: