இடர்முகாமைத்துவ அமைச்சுக்கு இந்தியா இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் நன்கொடை!

பாரிய அளவில் நீரை வெளியேற்றக்கூடிய இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்களை இந்தியா இடர்முகாமைத்துவ அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த கிர்லோஸ்கார் என்ற நிறுவனம் இந்த நீர் இறைக்கும் இயந்திரங்களை அமைச்சர் அனுர பிரிய தர்ஷன யாப்பாவிடம் கையளித்துள்ளது. சமீபத்தில் நாடு எதிர்கொண்ட வெள்ள நிலைமையை தொடர்ந்து இந்திய அரசாங்கம் இவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இவற்றின் பெறுமதி 7 மில்லியன் ரூபா. ஒரு இயந்திரத்தின் மூலம் ஒரு வினாடியில் 50 லீற்றர் நீரை வெளியேற்ற முடியும். அனர்த்த நிலையின்போது இவற்றை குறிப்பிட்ட இடங்களுக்கு இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாக இவை அமைந்துள்ளன.
Related posts:
மாணவர்களின் சீருடையில் மாற்றம் இல்லை - ஜனாதிபதி!
'ஒமிக்ரொன்' வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேர...
எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களால் பாதிப்புற்றோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - நுகர்வோர் பாது...
|
|