இடர்கால 5000 ரூபா விவகாரம்: விசாரணை வளையத்துள் உத்தியோகஸ்த்தர்கள் !

கொரோனா அனர்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண கொடுப்பனவினை மோசடி செய்த கிராமசேவகர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் மேற்கொண்ட 5 ஆயிரம் ரூபா விநியோகத்தில் தகுதி அற்றவர்களிற்கும், கிராமத்தில் வசிக்காதவர்களிற்கும் கிரம உத்தியோகத்தர்களது சொந்தங்களுக்கும் விநியோகித்தமை தொடர்பில் இதுவரை 4 கிராமங்களில் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட இடங்களில் சாவகச்சேரி , சங்காணை , நல்லூர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் கிராம சேவகர்கள் தற்காலிகமாக பிரதேச செயலகங்களிற்கு இணைப்புச் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறும் நிலையில், கிராம சேவகர்கள் முறைகேடாக வழங்கியவர்களிடம் நிதியை மீள வழங்குமாறு கோருவதோடு மீண்டும் மாற்று ஆவணங்கள் தயாரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவிக்கையில் குறித்த மூன்று பிரதேச செயலாளர் பிரிவிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் சாவகச்சேரி பகுதியிலேயே அதிக முறைப்பாடு கிடைத்தன. இவை தொடர்பான விசாரணைகள் முடிந்த பின்னரே முழுமையான விபரம் தெரிவிக்க முடியும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான மோசடிகள் நடைபெற்றுள்ள நிலையில் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|