இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் – கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!
Sunday, August 20th, 2023கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்ற உத்தரவு தொடர்பில் ஆசிரியர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்பு இருந்த அதே பாடசாலைகளில் பணியாற்றுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சேவையின் தேவை கருதி சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் பணிபுரிய அனுமதிக்குமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேவைக்கதிகமான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகளில் இருந்து பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் நடைமுறைபடுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|