இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுப்பு: மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Tuesday, May 8th, 2018

மாதகல் பகுதியில் 13 வயதுடைய மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டதனாலேயே  இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியைக் காணவில்லை என வீட்டார் தேடிய போது அவர் மரம் ஒன்றில் தூங்கிக் கொண்டிருப்பதனைக் கண்டுள்ளனர். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: