இங்கிலாந்தில் பிளாஸ்ரிக் பைகளின் விலையை இரட்டிப்பாக்கத் தீர்மானம்!
Monday, August 31st, 2020இங்கிலாந்தில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்ரிக் பைகளின் விலை இரட்டிப்பாக்கப்பட்டு 10 பவுண்ட்ஸ் வரை உயர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடக், இங்கிலாந்து முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் இது 2021 ஏப்ரல் முதல் அமுலாகும் என்றும் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரங்கள் துறை (Defra) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் யூஸ்ரிஸ் (George Eustice) தெரிவிக்கையில், “இங்கிலாந்தே உலகளாவிய முயற்சியின் தலைமை. ஆனால் நாங்கள் மேலும் செல்ல விரும்புகிறோம். எனவே தேவையற்ற கழிவுகளை அகற்றி மீண்டும் பசுமையை உருவாக்க முடியும்.
எங்கள் பிளாஸ்ரிக் பை கட்டணம் பல பில்லியன் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ரிக் பைகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் பற்றிய எமது வெற்றியை முன்னோடியாகக் கொண்டு பல நாடுகள் இந்த முயற்சியைப் பின்பற்றத் தூண்டுகிறது என்று நம்புகிறேன். எனவே பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி நீண்ட பசுமை மாற்றத்தைச் செயற்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|