ஆவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான்!
Saturday, May 25th, 2019வடக்கில் ஆவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, அங்கு அமைதி நிலவுவதாக விடைபெற்றுச் செல்லும் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பிரதிக் காவல்துறை மா அதிபராக கடமையாற்றி வந்த அவர் தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார்.
இந்த நிலையில், காங்கேசன்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருட காலம் தான் வடக்கில் சேவையாற்றியதாகவும், தற்போது அங்கு அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆவா குழு தொடர்பான பிரச்சினை தற்போது அங்கு இருக்காது என விடைபெற்றுச் செல்லும் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேநேரம், தமக்கு பதிலாக புதிய சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் விரைவில் பதிவியேற்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|