ஆளுமையற்ற வடக்கு மாகாணசபையும் பிசுபிசுத்துப்போன விஷேட கூட்டத்தொடரும்!

Monday, July 16th, 2018

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்துகொள்ளவில்லை என தெரியவருகின்றது.

வடக்கு மாகாணசபையின் 127வது அமர்வின் விசேட அமர்வு இன்று (16) யாழ் கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் ஆரம்பமானது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அமைச்சரவை விடயத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் பொருட்டு பத்தொன்பது உறுப்பினர்கள் எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இன்றைய (16) தினம் விசேட அமர்வு நடைபெற்றது.

இவ்விடயம் உச்ச நீதிமன்றில் உள்ளபடியால் தான் இதில் கலந்து கொள்ளவில்லை  என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் புறக்கணிக்கணிப்பதாக அவைத் தலைவருக்கு  என கடிதம் மூலம்   அங்கம் வகிக்கும் கட்சியான ரெலோ அமைப்பின் ஏனைய ஐந்து உறுப்பினர்களும்  அமர்வில் கலந்துகொண்டிருந்தபோதும் மேற்படி விவாதத்தில் தாம் பங்குகொள்ளவில்லை என தெரிவித்து அமர்விலிருந்து வெளியேறினர்.

அதைத்தொடர்ந்து அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இந்த விசேட அமர்வை ஆரம்பித்தார்.

ஏனைய மாகாண அமைச்சர்கள் எவரும் பங்குகொண்டிராத நிலையில் பத்தொன்பது உறுப்பினர்களுடன் இந்த விவாதம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: