ஆலய திருவிழாவில் பட்டாசு வெடித்து இளைஞன் படுகாயம்!

யாழ். குரு நகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் பட்டாசு கொளுத்திய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பட்டாசு கொளுத்திய போது அவரின் வலது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் எரிகாயம் ஏற்பட்டுள்ளது.
பெருமளவான பட்டாசுகள் இந்த சந்தர்ப்பத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!
விவசாய அமைச்சின் கீழுள்ள ஊழியர்களின் விடுமுறைகள் ஜூலை 06 முதல் இரத்து - ஜூலை 07 முதல் உரம் விநியோகத்...
|
|