ஆலயங்களில் ஒன்றுகூடுவதை தவிருங்கள் – பொதுமக்களிடம் யாழ் மாவட்ட செயலகம் வேண்டுகோள்!

Friday, November 13th, 2020

தீபாவளி தினமாகிய நாளையதினம்  பொதுமக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம்  என யாழ் மாவட்டச் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தால் ஊடகங்களுக்க விடுக்கப்பட்ட செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் தீபாவளி பண்டிகை நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: