ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை – பதிவாளர்கள் சங்கத்தினரின் குற்றச்சாட்டு!
Monday, August 17th, 2020பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்களுக்கு ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளதாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்கள் சங்கம் தெவித்துள்ளது.
நாடு முழுவதும் 2 ஆயிரம் பதிவாளர்கள் பணியாற்றுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஹேமசிறி ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஆயிரத்து 662 பதிவாளர்கள் செயற்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் முறையற்ற விதத்தில் மேலும் 200 பேருக்கு நியமனங்களை வழங்கினார். அவர்கள் உட்பட தற்போது இலங்கையில் 2 ஆயிரம் பதிவாளர்கள் வரையில் செயலாற்றுகின்றனர்.
எனவே, இதனூடாக பதிவாளர்களுக்கான கொடுப்பணவு தாமதமடைந்துள்ளதாகவும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹேமசிறி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
அதிகரிக்கும் காணிப் பிணக்குகளால் ஏனைய பிரச்சினைகள் முடக்கப்படுகின்றன - சுந்தரம் அருமைநாயகம்!
கொழும்பு - பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பம்!
சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு விவகாரம் - தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு வி...
|
|