ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Saturday, January 5th, 2019

யாழ்ப்பாணத்திலுள்ள 6 பாடசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவற்றிற்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில், விசேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த ஆறு பாடசாலைகளும், நுளம்புகள் பரவும் இடங்களை பேணி வந்ததாக கூறியே சுகாதார பிரிவினர், யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கலொன்றை செய்துள்ளனர்.

இதேவேளை, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட யாழ்.பல்கலைகழகம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் விடுதி வளாகங்களிலும் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் காணப்படுவதாக, சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: