ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க வலியுறுத்து!

Saturday, August 21st, 2021

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல எனவும் நாட்டை சிக்கலுக்குள் தள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக ஆற்றிய விசேட உரையின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் நாட்டை தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் நாட்டில் உள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் மிக அவதானமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடுகளை திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகவே சிறிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் தமது நாடும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது,  உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன.

உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள்,  இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு  சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஆகவே சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்கு கொண்டுச் செல்லக் கூடாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: