ஆர்க் பீஸ் சீன கப்பல் இலங்கை வருகை!

Sunday, August 6th, 2017

சீன மக்கள் இராணுவத்திற்கு சொந்தமான நடமாடும் வைத்தியசாலையென வர்ணிக்கப்படும்  ஆர்க் பீஸ் கப்பல்  நாளை  இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளது.

சமாதானம் அபிவிருத்தி ஒத்துழைப்பு சகலருக்கும் வெற்றி என்ற கோட்பாட்டை சிரமேற்றுஇ சர்வதேச மனிதாபிமான பொறுப்பை நிறைவேற்றும் பணியில் இந்த  கப்பல் ஈடுபட்டுள்ளது.

இந்தக் கப்பல் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.  எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாக சீன தூதுரகம் அறிவித்துள்ளது.

இந்தக் கப்பல் மூன்று சமுத்திரங்களை தாண்டி ஐந்து கண்டங்களில் உள்ள 29 நாடுகளுக்குச் சென்று ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மருத்துவ சேவைகளை வழங்கியிருப்பதாக சீன தூதுரகத்தின் புள்ளி விபரங்களpலிருந்து தொயவச்துள்ளது.

Related posts: