ஆரியகுளத்தை புனரமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டம் யாழ் மாநகரசபையினரால் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளம் குளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மதியம் 12 மணிக்கு ஆரியகுளத்திற்கு அருகில் இடம்பெற்றது.
தியாகி அறக்கொடை நிதியத்தின் வாமதேவா தியாகேந்திரனுடைய அனுசரணையில் குறித்த குளமும் அதன் அயல் பகுதிகளும் புனரமைத்து அழகுபடுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஆரியகுளத்தினை அழகுபடுத்தும் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வில மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர், தியாகி அறக்கொடை இயக்குநர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொறியிலாளர், மாநகர உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் குறித்த அங்குரார்ப்பண நிகழ்வின் நினைவாக இந்த செயற்றிட்டத்தை விளக்கும் பதாகை ஒன்றும் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|